பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கர்குடி ஆகிய மூன்று ஸ்தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.
கிருஷ்ணாரண்யமாக இருந்த இப்பகுதியை வசந்தராஜன் என்பவன் ஆண்டு வந்தான். அவனது இஷ்ட தெய்வமான நரசிம்மருக்கு ஒரு கோவில் கட்ட தீர்மானித்து, அதற்கான பணிகளில் யோசனைப்படி, பெரிய யாகம் ஒன்றை செய்ய முற்பட்டான்.
அந்த யாகத்தை தடுத்து வசந்தராஜனுக்கு பலவிதமான தொல்லைகளை கொடுத்து வந்தான் பரிகலாசுரன் எனும் அசுரன். இந்த அசுரன், சிவபெருமான் திரிபுரம் எரித்த போது, அங்கிருந்து தப்பி ஓடி வந்து, இங்கு ஒளிந்து கொண்டவன். குதிரை முகமும் மனித உடலும் கொண்டதால், பரிகலாசுரன் என்று பெயர்.
ஒரு புதருக்குள் மறைந்து உட்கார்ந்து கொண்டு, நரசிங்கரை தியானித்து ஜபம் பண்ணிக்கொண்டிருந்த வசந்தராஜனை, தனது கோடாரியால் தாக்க சென்ற பரிகலாசுரனை, புதருக்குள்ளிருந்து புறப்பட்ட நரசிம்மர் சம்ஹாரம் செய்தார்.
அசுரனை அழித்த பிறகு, இறந்தவர்களை உயிர்ப்பித்து தந்த பெருமான், அரசனுக்கு சேவை சாதித்தார் என ஸ்தல வரலாறு. அரசனும் தனது திட்டப்படி, இந்த ஆலயத்தை நிர்மாணித்தான் என ஸ்தல வரலாறு.
வாமதேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹம்.
அஷ்ட நரசிம்ம ஸ்தலங்களுள் ஒன்று.