வெள்ளத்தினால் அடித்து வரப்பட்ட லிங்கம் அகரம் எனும் இவ்வூரில் கரை ஒதுங்கியது. ஊர் முக்கியஸ்தர்களின் கனவில் தோன்றிய ரேணுகா பரமேஸ்வரி இதனைத் தெரியப்படுத்தினாள். மக்கள் சிவலிங்கத்தை வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்தனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் (அகரம்)
Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். சதுரமான ஆவுடையாருடன் கூடிய அழகிய திருமேனி. லிங்கத்தின் பின்புறமாக வீராசனத்தில் அன்னை ரேணுகா பரமேஸ்வரி வீற்றிருக்கின்றாள். டமருகம், திரிசூலம், கபாலம், கட்கம் ஏந்திய சதுர்புஜங்களும், நாக பிம்பங்களும் கொண்டு தரிசனம் தருகின்றாள். கால்வாய் நடுவே கிருஷ்ணன் பாறையும், அதில் ருத்ராட்ச மரமும் விசேஷமாக அமைந்துள்ளன. சற்றுத் தள்ளி கஜேந்திர மோட்சப் பாறை உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.