அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனநாதர் திருக்கோவில் (தென் திருப்புவனம்)

Primary Deity
ஸ்ரீ புஷ்பவனநாதர் மற்றும் ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
தஞ்சாவூர்
Contact Number
+91-Not Available

வீரபாண்டியன் - சுந்தரவல்லி தம்பதியினர் குழந்தை பாக்கியம் வேண்டி இவ்விறைவனிடம் பிரார்த்தித்தனர்.

சுந்தரவல்லி தான் பார்க்கும் குழந்தைகளை எல்லாம் கொஞ்சி விளையாடி, ஒரே மாதிரி அன்பு செலுத்தி வந்தாள்.

ஆண் குழந்தைக்கு பெண் உடையும், பெண் குழந்தைக்கு ஆண் உடையும் அணிவித்து அழகு பார்ப்பாள். இதே போன்ற எண்ணத்தில் வரதராஜப் பெருமாளுக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்தும், புஷ்பவனநாதருக்கு துளசி அலங்காரமும் செய்து மகிழ்ந்தாள்.

இறைவனருளால் கோரிய வரம் கிடைக்கப் பெற்றாள். இதை நினைவு கூறும் வகையில் இன்றளவும் பெருமாளுக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்கின்றனர்.

மூலவர்: ஸ்ரீ புஷ்பவனநாதர், அம்பாள்: ஸ்ரீ பூந்தேவி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான ஸ்ரீ புஷ்பவனநாதர்.

நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றாள் அம்பாள் ஸ்ரீ பூந்தேவி.

கோஷ்டமூர்த்தங்களும், பிரகார வலச்சுற்று தேவதைகளும் அழகாக இருக்கின்றனர்.

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சங்கு - சக்கரதாரியாக நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக நிலையில் காணப்படுகிறார். கால் மாற்றி அமர்ந்துள்ளது வித்தியாசமான கோலம்.

வலக்காலை மடித்து இடது தொடை மீது வைத்துள்ளார். சின்முத்திரை, தனுர் ஹஸ்தம், மான், மழு கொண்ட சதுர்புஜங்களை உடைய அழகிய திருமேனி.

கல்லால மரம், முனிவர்கள், ஓலைச்சுவடி ஆகியன காணப்படவில்லை.

பலவிதமான அலங்காரங்கள் செய்கின்றனர்.

கடனா நதி, ராம நதி மற்றும் தாமிரபரணி மூன்றும் சங்கமிக்கும் முக்கூடலின் தெற்கே உள்ளது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...