ராஜசிம்ம பல்லவ மன்னன் இவ்வு+ரின் இயற்கையான அழகில் மனதைப் பறிகொடுத்து, இங்கு கைலாசநாதருக்குக் கோயில் ஒன்று எழுப்ப முடிவு செய்தான். காஞ்சியில் உள்ளது போன்றே கோயில் கட்டவும், பஞ்சபூத ஸ்தலங்களை நினைவுறுத்தும் வகையில், ஸ்ரீ பிருத்வீச்வரர் எனப் பெயரிடவும் முடிவு செய்து அதன்படி நிர்மாணித்த கோயில் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இவ்வு+ரிலுள்ள ரஜதகிரி எனப்படும் வெள்ளி மலையில், மூலவராக சோமநாதேச்வரரும், அம்பாள் மரகதவல்லியும் எழுந்தருளியுள்ளனர்.