அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில், பெரியபாளையம்

Primary Deity
-
Temple Type
பவானி அம்மன் திருக்கோயில்
Location
Contact Number
+91-Not Available

தனது தங்கையான தேவகிக்கு பிறக்கப் போகும் எட்டாவது சிசுவால் தான் உயிரிழக்க நேரிடும் என அறிந்துகொண்ட கம்சன், ஒவ்வொரு குழந்தையையும் அழிக்கிறான். எட்டாவது சிசுவாகப் பிறந்த கண்ணன் தன்னை யசோதையிடம் கொண்டுபோய் விட்டுவிட்டு, அங்கிருக்கும் மாயை என்னும் பெண் குழந்தையை எடுத்து வந்து, தேவகியின் அருகில் வைத்து விடும்படி வசுதேவரிடம் கூறுகிறான். தேவகியின் அருகே இருந்த பெண் குழந்தையே அந்த எட்டாவது குழந்தை என்று எண்ணிய கம்சன், அதைத் தூக்கி ஆகாயத்தில் வீசி, வெட்டுவதற்கு வாளை ஓங்கியதும், அந்தப் பெண் சிசு ஒளி வீசும் திருவுருவமாக மேலே எழும்பிச் சென்று, கம்சனை எச்சரித்துவிட்டு மறைந்தது. அங்கிருந்து மறைந்து, பஞ்ச சக்தியாகவும், அருள் சக்தியாகவும் உருவெடுத்து, பெரியபாளையம் வந்து அமர்ந்தாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இது ஒரு சக்தி ஸ்தலம்.

மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள அன்னை பவானியின் எழிற்கோலம் அற்புதமானது. பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் விதத்தில் தரிசனம் தருகின்றாள். ஓங்கார வடிவமாக, சங்கு-சக்கரதாரிணியாக, பாதி திருவுருவமாக அமர்ந்த கோலம். மேற்கரங்களில் சங்கு-சக்கரம், கீழ்க்கரங்களில் வாளும் அமுத கலசமும் ஏந்தி காணப்படுகின்றாள். அருகில் கண்ணன் மற்றும் நாகதேவன் திருவுருவங்களை தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...