1943ஆம் வருடம் சாயி படத்தின் முன்பாக நாகம் ஒன்று படமெடுத்து ஆடியதாகக் கூறப்படுகிறது. விசேஷமாக சங்கு-சக்கர ரேகை தெரிந்ததாம். இதனால் நாகசாயி மந்திர் எனப் பெயர் கொண்டதாகக் கூறுகின்றனர்.
1961ஆம் வருடம் ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜியின் ஆசியுடன் வரதராஜ அய்யா மற்றும் சி.வி. ராஜன் ஆகியோரால் இவ்வாலயம் நிறுவப்பட்டதாகக் கூறுகின்றனர்.
தினமும் சாயி பஜனைகள் நடைபெறுகின்றன. பிரசாதமும் தருகின்றனர்.
சாயி பள்ளிக்கூடம் மற்றும் சாயி தீப் கல்யாண மண்டபம் ஆகியன சேவை நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.