அருள்மிகு ஸ்ரீ ஜெய துர்க்கா பீடம் (படப்பை)

Primary Deity
ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி, பஞ்சமுக சிவன், தன்வந்த்ரி, சஞ்சீவி ஆஞ்சநேயர்
Temple Type
Amman Temples
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

Information not available.

முதலில் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதியை தரிசித்து ஆசி பெற்று ஆலய உலா மேற்கொள்கின்றனர். மிகவும் அழகான பெரிய திருமேனி. தனது துணைவியான நீல சரஸ்வதியுடன் எழுந்தருளி அருள்புரிகின்றார். சிவ அம்சத்தோடு கூடிய பஞ்சாட்சர கணபதியும் சந்நிதி கொண்டுள்ளார்.

மூலஸ்தானத்தில் பிரதான தெய்வமான ஸ்ரீ ஜெய துர்க்கா, எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ துர்க்கையாக சிம்ம வாஹனத்தில் கம்பீரமாக அமர்ந்து தரிசனம் தருகின்றாள். இவளை உபாசிப்பவர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும் வரப்பிரசாதியாக திகழ்கிறாள்.

ஸ்ரீ ப்ரத்யட்ச வாராஹி தனி சந்நிதி கொண்டுள்ளார். இவளுக்கு கிழங்கு வகைகளை சமைத்து பஞ்சமி அன்று நிவேதித்தால் முன்வினைப் பயன்களால் வரும் தீமைகள் விலகும். சுற்று சுவரில் கோஷ்ட தேவதைகளாக - மஹிஷாரூட வாராஹி, வ்யாக்ரரூட வாராஹி, அஸ்வாரூட வாராஹி ஆகியோர் சுதை சிற்பங்களாக இடம் பெற்றுள்ளனர்.

துர்கை சித்தரின் அதிஷ்டானத்தில் பஞ்சமுக சிவன் சந்நிதி கொண்டுள்ளார். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் சஹிதம் காட்சி தரும் செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தன்வந்த்தரி மஹாப் பிரபு, ஸ்ரீ அன்னபூரணி ஆகிய தெய்வங்களை தரிசிக்கலாம்.

இங்கு எழுந்தருளியுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். சக்தியை தம் மடியில் இருத்தி, ஸ்வர்ண கலசம் கரத்தினில் தாங்கி தரிசனம் தருகின்றார். பௌர்ணமி நாட்களில் முழுமலர் தாமரை மாலை சாற்றி, மல்லிகையால் அர்ச்சித்து, பால் கொண்டு தயாரித்த இனிப்புகளை நிவேதனம் செய்து வழிபடுகின்றனர்.

புவனேஸ்வரி மற்றும் கருமாரி தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். காவல் தெய்வங்களாக கருப்பாயி உடனாய ராஜ கருப்பர் எழுந்தருளியுள்ளனர். ராஜ கருப்பர் சந்நிதியில் 18 படிகள் அமைத்துள்ளனர்.

இத்தலத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் தனது தாயான அஞ்சனா தேவி மற்றும் தந்தையான வாயு பகவான் சஹிதம் எழுந்தருளியிருப்பது எங்கும் காணக் கிடைக்காத ஒன்று. மூல நட்சத்திர தோஷக்காரர்கள் வழிபட நன்மை கிடைக்கும்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...