தற்போது உயர் நீதிமன்றம் இருக்கும் வளாகத்தில் இருந்த மல்லிகேஸ்வரர் மற்றும் சென்னக் கேசவர் கோவில்களை ஆங்கிலேயர்கள் இடித்து தரைமட்டமாக்கி விட்டதாகவும், இதனால் கோபமுற்ற மக்களை சமாளிக்க முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
பிக்கோட் துரை என்பவரிடம் மொழிபெயர்ப்பாளராக இருந்த மணலி முத்துக்கிருஷ்ண முதலியாரின் ஆலோசனைப்படி, இடிபட்ட கற்களைக் கொண்டே தற்போதுள்ள இடத்தில் வெள்ளையர்கள் நிலம் கொடுத்ததாகவும், முத்துக்கிருஷ்ண முதலியார் தனது சொந்த செலவிலேயே இக்கோவில்களை கட்டி முடித்தார் எனவும் குறிப்பொன்று கூறுகிறது.
இக்கோவிலின் தீர்த்தக் கிணற்றிலுள்ள தீர்த்தத்தையே அபிஷேகத்திற்கு பயன்படுத்துகின்றனர். தவிர, முன்நாளில், நீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் எடுப்பது இந்த தீர்த்தத்தின் மீதுதான் என கூறப்படுகிறது.