அருள்மிகு ஸ்ரீ சபரி சைதன்ய க்ஷேத்ரம் (நங்கநல்லூர்)

Primary Deity
ஸ்ரீ ஐயப்ப சாஸ்தா
Temple Type
ரஞ்சன்குடி கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

சுவாமி யோக நிலையில் இருக்கும்போது செய்யப்படும் குண்டலி அபிஷேக விபூதி, சகல சௌபாக்யம் தரவல்லது எனக் கூறப்படுகிறது.

சபரிமலையில் மகரஜோதி தெரியும் அதே நேரத்தில் இங்குள்ள சுவாமி சந்நிதானத்தின் நேர் எதிரில் கிழக்கு திசையில் மகர நட்சத்திர தரிசனம் கிடைக்கின்றது. சபரி மலையில் நடப்பது போலவே இங்கும் பூஜா முறைகள் பின்பற்றப்படுகின்றன.

சபரிமலை மேல்சாந்தியாக (1991ல்) இருந்த கே.சி.நாராயணன் நம்பூதிரி, இங்கு தந்திரியாக இருந்து வழி நடத்துகிறார்.

ஆலய முகப்பில் கருப்பண்ண சுவாமி மற்றும் கருப்பாயி காவல் தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர்.

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஐயப்ப சாஸ்தா எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். ராஜ அலங்காரம் பிரமாதமாக இருக்கின்றது. கண்களையும் மனதையும் விட்டகலா எழில் தோற்றம் கொண்டுள்ளார்.

கன்னிமூல கணபதி, நாகராஜா, மஞ்சமாதா சந்நிதிகளும், கொச்ச கடுத்த சுவாமியின் எழில் உருவமும் தரிசிக்கலாம்.

புலி மேல் அமர்ந்த அய்யன் உற்சவ மூர்த்தியாக தரிசனம் தருகின்றார். ஒவ்வொரு உத்திர நட்சத்திரத்தன்றும் இவருக்கு பூக்களால் அபிஷேகம் செய்கின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...