அருள்மிகு ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோவில் (திருநெல்வேலி)

Primary Deity
மூலவர்: நீலமணிநாதர், லட்சுமி நாராயணர், பத்மநாபர்் உற்சவர்: கரிய மாணிக்கப் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
திருநெல்வேலி
Contact Number
+91-Not Available

நெல்லையப்பர் காந்திமதி திருக்கல்யாண வைபவத்தைக் காண வந்த கோவிந்தராஜப் பெருமாள் கம்பா நதி மண்டபத்தில் எழுந்தருளி தாரை வார்த்து தருவதாக ஐதீகம்.

'கரிய' என்பது சனியை குறிப்பதாகவும், 'மாணிக்க' என்பது சூரியனை குறிப்பதாகவும் உள்ளது. எனவே, 'கரியமாணிக்கப் பெருமாள்' என்ற திருநாமம் கொண்டார் எனக் கூறப்படுகிறது.

மூலவர்: நீலமணிநாதர், லட்சுமி நாராயணர், பத்மநாபர்.

மூலஸ்தானத்தில் பெருமாள் மூன்று நிலைகளில் சேவை சாதிக்கின்றார். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் நீலமணிநாதர் சேவை சாதிக்கிறார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். தெற்கே திருமுக மண்டலம் கொண்டு கல்யாண கோலத்தில் லட்சுமி நாராயணரும், உத்தர சயன கோலத்தில் பத்மநாபரும் சேவை சாதிக்கின்றனர். உற்சவராக கரிய மாணிக்கப் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.

நெல்லையப்பர் கோவிலில் தரிசனம் தரும் நெல்லை கோவிந்தரின் உற்சவ மூர்த்திகள் இங்கு சேவை சாதிக்கின்றனர். நித்ய ஆராதனையில் உள்ளனர். சிறப்பு மூர்த்தியாக ஆஞ்சநேயர் வடக்கு பார்த்து எழுந்தருளி அருள் புரிகின்றார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...