ஒரு சமயம் அனந்தபத்மநாபருக்கு தாகம் எடுத்ததால், தண்ணீர் கொண்டு வருமாறு அனந்தன் எனப்படும் ஆதி சேஷனிடம் பணித்தாராம். கோமுகத்து வழியே வெளிச் சென்று வாயு மூலையில் நின்று தரையைக் கொத்தி, தீர்த்தக் கிணறு ஒன்றை ஏற்படுத்தினார் ஆதி சேஷன். தண்ணீர் கொண்டு வர வெளியே சென்றதால் வாகனமாய் இல்லை போலும்.
ஒரு வைகுண்ட ஏகாதேசி தினத்தன்று காலை கருடாழ்வாரின் தலையில் நாகப்பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டதாம். அதைக் கவனியாது துளசி தீர்த்தத்தைத் தெளித்தார் பட்டாச்சார்யார். அதை ஏற்றுக் கொண்ட பாம்பு எவ்வளவு விரட்டியும் போக மறுத்து அங்கேயே நிலை கொண்டதாம். அன்று முழுவதும் தீபாராதனை, அர்ச்சனை இவற்றை ஏற்றுக் கொண்ட பாம்பு மறு நாள் காணவில்லை எனக் கூறுகின்றனர்.