"விண்ணகரம்" என்றால் "விஷ்ணுக்ரஹம்" என்று பொருள். அதாவது திருமால் கோவில் கொண்டுள்ள இடங்கள் என்பர்.
விதர்ப்ப தேச மன்னன் புத்ர பாக்யம் வேண்டி காஞ்சிபுரம் வந்து ஸ்ரீ கைலாசநாதரை பூஜித்தான். சிவபெருமான்
அருளால் அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்து பல்லவன், வில்லவன் எனப் பெயர் கொண்டு வளர்ந்தனர்.
இவர்கள் விஷ்ணுவின் துவாரபாலகர்களே என்பர்.
சிறந்த விஷ்ணு பக்தர்களாக விளங்கி வந்த இவர்கள், இவ்வாலயத்தின் புண்யகோடி விமானத்தின் வாயு மூலையில்
அச்வமேத யாகம் நடத்தினர். மனம் மகிழ்ந்த விஷ்ணு பரமபதநாதனாக இவ்விருவருக்கும் ப்ரத்யட்சம் ஆனதாக வரலாறு.
அதே திருக்கோலத்தில் இன்றும் காட்சி அளிக்கின்றார். இந்தக் காட்சி மூன்றாம் தளத்தில் உள்ளது. இப்போது இவரை
சேவிக்க அனுமதிப்பதில்லை என்கின்றனர்.
இரண்டாம் நந்திவர்மன் என்றழைக்கப்படும் பரமேஸ்வர வர்மன் தான் வழிபடும் இஷ்ட தெய்வங்களை ஸ்தாபித்து
குடைவரைக் கோவில் ஒன்றை உருவாக்கினான். பல்லவர்களின் வரலாற்றை திருச்சுற்றின் மேற்கு பகுதியில்
சிற்பங்களாக செதுக்கியுள்ளான். சிம்மத் தூண்களால் தாங்கப்பட்ட திருச்சுற்றின் உட்சுவர்களில் எண்ணற்ற
சிற்பங்களை படைத்தான். நந்திவர்மன் என்கிற பரமேஸ்வர வர்மன் இந்த ஆலயத்தை கற்றளியாக்கினான்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
திருமால் கோவில் கொண்டுள்ள விஷ்ணு கிரஹங்களை விண்ணகரம் என்பார்கள்.
108 திவ்ய தேசங்களுள் ஆறு திவ்ய தேசங்களை விண்ணகரங்களாக கூறியுள்ளனர்:
திரு விண்ணகரம் (உப்பிலியப்பன் கோவில்),
அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்),
வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்),
காழிச் சீராம விண்ணகரம் (சிர்காழி),
நந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்),
பரமேஸ்வர விண்ணகரம் (காஞ்சி).