உலகம் முழுதும் பிரளய வெள்ளம் எழும்பி, கடல் நீரால் கபளீகரம் செய்யப்பட்டு வரும் வேளையில், இத்தலத்தில்
விருப்பமுடன் எழுந்தருளிய உமையவள்
காத்தருள பிரார்த்தித்தாள். உலகம் கடல் நீரால் மூழ்கியும், இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால்
இவ்வூர் திருத்தேங்கூர் எனப் பெயர் கொண்டது.
இவ்வளவு சிறப்பு பெற்ற ஸ்தலம் என கேள்விப்பட்டு மஹாலட்சுமி இங்கு தங்கி சிவபூஜை செய்து வந்தாள். இதனால்
திருத்தங்கூர் எனவும் பெயர் கொண்டது.
நவகிரகங்கள் இத்தலம் வந்து தத்தம் பெயரால் சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டனர். சுமைகளையும் பாவங்களையும்
போக்கிக் கொள்ள கங்கை இங்கு வந்து சிவகங்கை எனும் தீர்த்தத்தை உண்டாக்கி நீராடி, இவ்விறைவனை
வழிபட்டுள்ளார். 48 தினங்கள் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டாள்.
உமையவள், மஹாலட்சுமி, கங்கை, பீஷ்மர், துரோணர், பாண்டவர்கள், நவகிரகங்கள் ஆகியோர் வழிபட்ட ஸ்தலம்.
அகலிகை தனது பாவங்களைப் போக்கிக் கொண்டு சிவனருள் பெற்ற ஸ்தலம்.
தேவாரத்திருத்தலம்