அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோவில் (உப்பூர்)

Primary Deity
வெயிலுகந்த விநாயகர் எனப்படும் உப்பூர் பிள்ளையார்
Temple Type
Vinayagar Temples
Location
கிருஷ்ணகிரி
Contact Number
+91-Not Available

சிவபெருமானை மதியாது தட்சன் செய்த யாகத்தை வீரபத்ரர் அழித்தார். யாகத்தில் பங்கு கொண்ட அனைவரையும் தண்டித்தார். இதில் கலந்து கொண்டு தனது பற்களை இழந்து தண்டிக்கப்பட்ட சூரியன் இத்தலம் வந்து இங்குள்ள விநாயகரை முறைப்படி பூஜித்து ஆராதனை செய்தான். பிரத்யட்சமான விநாயகர் அவனது தவறான செய்கைக்கு மன்னிப்பளித்து வரமருளினார் என ஸ்தல வரலாறு.

தனக்கு பிரத்யட்சமான அதே கோலத்தில் இங்கு கோவில் கொள்ள வேண்டுமெனவும், விநாயகரின் திருமேனி மீது எப்போதும் தனது ஒளி படர்ந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும் சூரியன் கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கு தரிசனம் தருகின்றார்.

ராமபிரான் சீதையை மீட்க செல்லும் வழியில், இந்த சுயம்பு விநாயகரைப் பற்றி தெரிந்து கொண்டு இங்கு வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. ராமேஸ்வர யாத்திரை செல்பவர்கள் இவரை வழிபட்ட பின்னரே பயணத்தை மேற்கொள்வது வழக்கம்.

மூலஸ்தானத்தில் கம்பீரமான தோற்றத்தில் அழகே உருவாக தரிசனம் தருகின்றார் உப்பூர் பிள்ளையார் எனப்படும் ஆதபக்ஷ விநாயகர். ஒளி வீசும் பிரகாசமான திருமேனி. ஜொலிக்கும் ஆபரணங்கள் அணிந்து மீண்டும் மீண்டும் தரிசிக்க ஆவலைத் தூண்டும் விதமாக காட்சி தருகின்றார். இவருக்கு ஆதவ கிரண சந்துஷ்ட கணேசர் மற்றும் வெயிலுகந்த விநாயகர் ஆகிய திருநாமங்களும் உண்டு.

மழை, வெயில், குளிர் பொருட்படுத்தாது மேற்கூரை இல்லாத கருவறையில் இருப்பவர். எப்போதும் சூரிய ஒளி தன் மீது படும்படி வீற்றிருப்பவர். தட்சிணாயனத்தில் விநாயகரின் மீது தென் பகுதியிலும், உத்தராயணத்தில் விநாயகரின் மீது வட பகுதியிலும் சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.

பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விசாலாட்சி உடனாய விஸ்வநாதர், பிள்ளையார் நாகர்கள், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், நடராஜர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். மண்டபத் தூண்களின் அழகிய சிற்பங்களும், பேரெழில் கொண்ட உற்சவ விக்ரஹங்களும் காணலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...