கரும்புக்கழிகளை ஒன்றாக சேர்த்து கட்டாக கட்டி வைத்தது போன்ற தோற்றத்தில் மூலவர் தரிசனம் தருவதால் சுவாமிக்கு வெண்ணிக்கரும்பர் என்ற பெயர் வந்தது. அழகம்மைக்கு வளையல்களைக் கோர்த்து அணிவிப்பதாக பிரார்த்தனை செய்து கொண்டு, அது போன்றே செய்கின்றனர். ஸ்தல விருட்சமாக இருக்கப்போவது யார்? என்று கரும்பும் - வெண்ணியும் (நந்தியாவட்டையும்) போட்டி போட்டன. இருவரையும் சமாதானம் செய்து வைத்த இறைவன், தன் பெயரில் கரும்பையும் ஸ்தல விருட்சமாக வெண்ணியையும் இருக்க வைத்தார். இதனால் இவ்வூர் வெண்ணியூர் எனப் பெயர் கொண்டு நாளடைவில் கோவில் வெண்ணி என்றானது. தேவசேனா திருமணத்தின் முகூர்த்த ஓலையை முதன் முதலாக இத்தலத்திற்கு அனுப்பச் சொல்லிப் பணித்தார் இறைவன் என ஸ்தல வரலாறு. முசுகுந்த சக்ரவர்த்தி ஸ்தாபித்த கற்கோவில். சூரியன் பூஜித்த ஸ்தலம். சேர - பாண்டிய மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களோடு கரிகாலசோழன் போர் புரிந்து வெற்றி கொண்ட ஸ்தலம் என சரித்திர குறிப்புகள் கூறுகின்றன.
அருள்மிகு வெண்ணிக்கரும்பேஸ்வரர் திருக்கோவில் (கோவில் வெண்ணி)
Primary Deity
வெண்ணிக்கரும்பர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
கரூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வெண்ணிக்கரும்பர். சதுரபீடம் கொண்ட அழகிய திருமேனி. சுயம்பு மூர்த்தம். சுவாமிக்கு கரும்பேஸ்வரர், ரசபுரீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. பங்குனி மாதம் 2, 3, 4 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் அழகம்மை எழுந்தருளியுள்ளார். சௌந்தர நாயகி என்றும் கூறுவர். பெயருக்கேற்ப சௌந்தரமான வடிவம். சுவாமியையும்-அம்பாளையும் ஒரே சேர தரிசிக்க ஏதுவாக அமையப் பெற்ற சந்நிதி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.