வியாச முனிவரின் சீடரான பைலர் எனும் முனிவர் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமர்ந்து வெங்கடாசலபதியைக் குறித்து தவமிருந்தார். பிரத்யட்சமான பெருமாளிடம், திருப்பதியில் சேவை சாதிப்பதைப் போலவே இத்தலத்திலும் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு சேவை சாதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மூன்று பெரிய கற்களை தாமிரபரணியில் மிதக்க விட்ட எம்பெருமான், அந்த மூன்று கற்களில் தம்மையும் தேவியர்களையும் வடிவமைத்து ஆவாஹனம் செய்தால், தான் அதில் கோவில் கொள்வதாகக் கூறி மறைந்தார். அதன்படியே கோவில் எழுப்பினார்கள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.