தேவேந்திரன் தான் கொண்ட சாபத்தினால் உடல் முழுவதும் கண்கள் பெற்றான். அந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு நற்கதி பெற்றான். இதனால் ஸ்வாமியையும் சேர்த்து வீர வரநாத ஸ்வாமி என அழைக்கின்றனர்.
திருக்கண்ணார் என்றிருந்த இவ்வூரின் பெயர் பின்னாளில் கிணார் என மருவியது.
தேவார வைப்புத்தலம்.