அருள்மிகு வீரமங்கள ஆஞ்சநேயர் திருக்கோவில், நல்லாட்டூர்

Primary Deity
வீரமங்கள ஆஞ்சநேயர்
Temple Type
ஆஞ்சநேயர் கோவில்
Location
செங்கல்பட்டு
Contact Number
+91-Not Available

Information not available.

வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 விக்ரஹங்களுள் இதுவும் ஒன்று. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில். குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள 'வீரமங்கள ஆஞ்சநேயர்', துள்ளி விளையாடும் ஒரு குழந்தையைப் போல் தோற்றம் கொண்டுள்ளார். 'பால ஆஞ்சநேயர்' என பிரசித்தம். மிகுந்த வரப்பிரசாதி. சுயம்பு.

நெற்றிக்கண்ணும் கோரைப்பற்களும் கொண்ட திருமுகம், சங்கு-சக்கரம், தாழம்பூ கொண்ட கரங்கள், இடுப்பில் கத்தியும், காலில் சலங்கையும், வாலில் மணியும் கொண்டு, திருப்பதியைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளார்.

மூலவர் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தனது வலது கையை உயர்த்தியும், இடது கையில் தாமரை மொட்டை ஏந்தியும் காட்சி தருகின்றார். வாலின் நுனியில் மணி காணப்படுகிறது.

'சீதா தேவி - ராமர்', 'லக்ஷ்மணர்', 'விநாயகர்', 'கருடன்', 'நவக்ரஹங்கள்', 'நாகதேவதை' ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். 'பட்டாபிஷேக ராமரின்' திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது.

இங்கு ஒரு பெரிய புற்றுக் கோவிலும் உள்ளது. பெரிய கருநாகம் ஒன்று, இக்கோவிலைக் காப்பதாகவும், ஆஞ்சநேயர் பீடத்திலேயே, இரவு வேளைகளில், படுத்திருப்பதாகவும், பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

இவ்வாலயத்திற்கு தீர்த்தக்கிணறு தோண்ட முயற்சிக்கையில், ஏழடி ஆழ கிணறு ஒன்று தானாகவே கிடைத்ததாக பட்டாச்சார்யார் தெரிவிக்கின்றார். சர்ப்ப தோஷம், திருஷ்டி போன்றவற்றிலிருந்து விடுபட இவரைப் பிரார்த்திக்கின்றார்கள்.

அமராவதி குரூப் ஹோட்டலின் நிர்வாக இயக்குனர் சக்ரவர்த்தி என்பவர் இந்த ஆலயத்தைக் கட்டி பராமரித்து வருகின்றார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...