தனது சாபத்தைப் போக்கிக்கொள்ள காமதேனுப் பசு, இங்குள்ள பாதிரி மரமருகேயுள்ள திருக்குளத்தில் நீராடி, இவ்விறைவனை வழிபட்டு, விமோசனம் பெற்றதாக வரலாறு. இக்குளம் இன்று மலட்டுக்குளம் என்றழைக்கப்படுகின்றது.
வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் வாழ்ந்த ஸ்தலம் இது. அவரது குழந்தை உபமன்யு காமதேனுவின் பாலைக் குடித்து வளர்ந்தவன். இவ்ஊருக்கு வந்ததும் இங்குள்ள பால் பிடிக்காது போனதால், குழந்தையின் பசியை ஆற்ற, பாற்கடலையே புலியூருக்கு இறைவன் வரவழைத்தார் எனக் கூறுவர்.