மகாபாரதப் போரில் கௌரவர்களை வெற்றி பெறுவதற்காக, சிவபெருமானிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்று வரும்படி வேத வியாசர் கூறிய யோசனையின்பேரில், விஜயனாகிய அர்ச்சுணன் இத்தலத்தில் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவார காலத்தில் விஜயமங்கை என்றழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது விசங்கி என்றழைக்கப்படுகிறது.
யமனை சம்ஹாரம் செய்த நிகழ்வை குறிப்பிட்டு திருநாவுக்கரசர் பாடியிருப்பதனால், ஆயுள் விருத்திக்கு வழிபட உகந்த ஸ்தலம் எனக் கூறப்படுகிறது.
தேவாரத் திருத்தலம்.