ஸ்தல வரலாறு: வேதாரண்யத்தில் ஓர் மடத்தில் தூங்கிக் கொண்டிருந்த அப்பர் பெருமானின் கனவில் தோன்றிய இறைவன், "வாய்மூருக்கு என்னைத் தொடர்ந்து வா" என்று அழைத்தார். வெண்ணீறு அணிந்த திருமேனி கொண்டவனாக தோன்றிய இறைவன், மெதுவாக நடந்து சென்றுகொண்டிருக்கையில், ஞானசம்பந்தரும் இவர்களைப் பின்தொடர்ந்தார். வெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன் கோவிலுக்குள் சென்று மறைந்து விட்டான். அப்பரும் ஞானசம்பந்தரும் சேர்ந்து பதிகம் பாடினார்கள். இறைவன் அவர்களிருவருக்கும் தரிசனம் தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இது சூரியன் வழிபட்ட ஸ்தலம். செவ்வாய் தோஷம் போக்கவல்ல ஸ்தலம்.