அருள்மிகு வானளாவிய பெருமாள் திருக் கோவில் (கோழ்குத்தி)

Primary Deity
ஸ்ரீநிவாசப் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
கரூர்
Contact Number
+91-Not Available

தொழுநோய் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒருவனுக்கு, விமோசனம் பெற ஒரு மந்திரத்தை உபதேசிக்கின்றார் முனிவர் ஒருவர். அந்த மந்திரத்தை விடாது சிரத்தையுடன் உச்சரித்து வந்தான் அவன்.

அவனது முன் பிரத்யட்சமான திருமாலிடம் - தான் செய்த பாவச் செயல்களையும், அதனால் அவஸ்தைப் படுவதையும் கூறி அழுதான் அந்த தொழு நோயாளி. முந்தைய ஜென்மத்தில் அவன் கொலை (ஹத்தி) செய்திருந்ததால் இப்படி அவதியுறுகிறான் எனக் கூறி, காவிரியின் ஸ்நான கட்டங்கள் அனைத்திலும் நீராடும்படியும், எங்கு நோய் விலகுகிறதோ, அங்கு விஸ்வரூப தரிசனம் தருவேன் எனவும் கூறி மறைந்தார் திருமால்.

பல ஸ்நான கட்டங்களில் நீராடிவிட்டு மூவலூர் அருகே வந்து நீராடியதும், தொழுநோய் மறைந்து, தேஜஸான மேனியைப் பெறுகிறான். அங்கிருந்து வடதிசையில் வானளாவ நின்று விஸ்வரூப தரிசனம் தருகின்றார் திருமால்.

நோய் நீங்கப் பெற்றவன் பிப்பலர் எனப் பெயர் பெறுகிறான். அவன் ஸ்நானம் செய்த கட்டம் பிப்பலர் கட்டம் எனப் பெயருற்றது.

அவனுடைய ஹத்தி நீங்க வடபால் கோடி காட்டியதாலும், அவனது கோடி பாவங்கள் விலகியதாலும், கோடிஹத்தி என அழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் கோழ்குத்தி, கோருஹத்தி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.

மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி விஸ்வரூப சேவை சாதிக்கின்றார். அத்தி மரத்தால் உருவான திருமேனி. 15 அடி உயரம் கொண்ட ஆஜானுபாகு தோற்றம். சங்கு, சக்கரம், கதை, அபய முத்திரை கொண்ட சதுர்புஜங்கள். அத்தி மரமே பெருமாளாக ஆனதால் வேர் பாகமானது பாதாரவிந்தமாக உள்ளது. இவரை வானமுட்டி பெருமாள், மானமுட்டிப் பெருமாள் என்றெல்லாம் அழைக்கின்றனர்.

தாயாருக்கு தனி சந்நிதி இல்லை. திருமார்பில் மஹாலட்சுமி வீற்றிருக்கின்றாள். இடப்பக்கத்தில் பூதேவியின் சிலை ஒன்றும் இருக்கின்றது.

மண்டபத்துள் திருமால், ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன. வெளிப்புற சுவரில் விஷ்வக்சேனர், யோக நரசிம்மர், நர்த்தன கிருஷ்ணர் ஆகியோரை சேவிக்கலாம்.

மூன்றடி உயரம் கொண்ட அழகான திருமேனியுடன் சேவை சாதிக்கும் ஆஞ்சநேயர் மிகுந்த வரப்ரசாதி. வாலை சுருட்டி சிரசின் மீது வைத்து அதில் மணியையும் தொங்கவிட்டபடி காட்சி தருகின்றார். சப்தஸ்வர ஆஞ்சநேயர் எனும் திருநாமம். தனி சந்நிதியில் யோக நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். சனி தோஷம் போக்க வல்ல க்ஷேத்ரம் என்று கூறுவர்.

இந்த கிராமத்தின் வடபுறமாக ஒரு சிவாலயம் இருக்கின்றது. அதில் மூலவராக சபாபதீஸ்வரரும் அம்பாள் சிவகாமசுந்தரியும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...