அருள்மிகு வரசித்தி விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள் திருக்கோவில் (நவக்கிரக கோட்டை)

Primary Deity
ஸ்ரீ வரசித்தி விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள்
Temple Type
நவக்கிரக கோவில்கள்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்திற்கு முன்புள்ள விசாலமான முன்மண்டபத்தில் விநாயகப் பெருமானின் பலவிதமான வண்ண சுதை சிற்பங்களைக் காணலாம். அவற்றுள் மிகப் பெரிய திருவுருவமாக சக்தி கணபதி தரிசனம் தருகின்றார். சுவற்றில் பல்வேறு வடிவங்களில் விநாயகரின் வண்ண ஓவியங்களும் உள்ளன.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். அவரது திருமுக அமைப்பு பாம்பைப் போல் உள்ளது. இது ஒரு சுயம்பு மூர்த்தம். இரண்டு பக்கங்களிலும் ராகு மற்றும் கேது எழுந்தருளியுள்ளனர். மொத்தத்தில் பார்க்கும்போது ஒரு லிங்கத்தின் அமைப்பு போலுள்ளது. ஸ்ரீ வரசித்தி விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி.

மூலஸ்தானத்தின் வலச்சுற்றில் ஜொலிக்கும் பொன் தகட்டில் பலவித விநாயகர் வடிவங்களை செதுக்கியுள்ளனர். விமானத்தில் காணப்படும் வண்ண சுதை சிற்பத்தில் தந்தையின் மடியில் பால விநாயகரையும், தாயின் மடியில் பால முருகனையும் காணலாம்.

மூலஸ்தானத்தின் பின்புறமுள்ள விசாலமான வெளிப்புறத்தில் நவக்கிரகக் கோட்டை அமைத்துள்ளனர்.

நடுநாயகமாக ஸ்ரீ சூரிய பகவான் தனது இரு மனைவிகளுடனும் (சாயா - உஷா), ஏழு குதிரைகளை பூட்டிய ரதத்துடனும், சிகப்பு வஸ்திரம் அணிந்தும் தரிசனம் தருகின்றார்.

சூரியனைச் சுற்றிலும் மற்ற கிரகங்கள் அமைந்துள்ளன. தெற்கில் அங்காரகன், வடக்கில் குரு, மேற்கில் சனி, கிழக்கில் சுக்கிரன், வடகிழக்கில் புதன், தென்கிழக்கில் சந்திரன், தென்மேற்கில் ராகு, தென்கிழக்கில் கேது என முறையாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் அதனதன் வர்ணங்கள், வாகனங்கள், தான்யங்கள், விருட்சங்கள், அடையாளங்கள், மற்றும் அவரவர் துணைவிகள், உரிய அதிதேவதைகள் என்று துல்லியமாக அமைத்துள்ளனர். அந்தந்த சந்நிதிகளின் மேலுள்ள கலசத்தில் அவரவர்க்குரிய தான்யங்களை நிரப்பியுள்ளனர். அவரவர்க்குரிய அட்சரங்களும் வரையப்பட்டு கன கச்சிதமாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.

அடுத்துள்ள சந்நிதியில் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள ஈஸ்வரனையும், காசி விஸ்வநாதரையும், அம்பிகையையும் தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...