அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோவில் (மயிலாடுதுறை)

Primary Deity
மூலவர்: வதாரண்யேஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: மேதா தட்சிணாமூர்த்தி
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

வழி காட்டும் வள்ளல் எனப் போற்றப்படுவதால் வள்ளலார் கோவில் என்றும் அழைக்கின்றனர். இவருக்கு கார்த்திகை மாத கடைசி வியாழன் நடைபெறும் மகா அபிஷேகம் சிறப்பானது. அது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

குரு பகவானின் சோதனைக்கு ஆளானவர்கள் இத்தலம் வந்து மேதா தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

நந்தி ஆணவத்தையும் சேர்த்து சுமந்தது. தன்னால்தான் இறைவன் நினைத்த இடங்களுக்கு விரைவாக சென்று வர முடிகிறது என எண்ணியது. நந்தியின் நிலையை அதற்கு உணர்த்தினார் இறைவன். கர்வம் கொண்டதன் பாவம் தொலைய, இவ்விறைவனை பூஜித்து நற்கதி பெற்றது நந்தி.

ரிஷப தேவருக்கு உபதேசம் செய்த அதன் மீதமர்ந்து மேதா தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

சப்த மாதர்களால் தனித்தனியே பூஜிக்கப்பட்ட ஸ்தலம் இது. சாமுண்டி வழிபட்ட ஸ்தலம்.

ஐப்பசியில் துலா மாத விழா நடைபெறும் போது, ரிஷப தீர்த்தத்திற்கு உலா செல்லும் மூர்த்திகள். கார்த்திகை மாத கடைசி வியாழன் தினத்தன்று மேதா தட்சிணாமூர்த்திக்கு மகா அபிஷேகம் செய்வார்கள்.

மயிலாடுதுறையை சுற்றி நான்கு திசைகளிலும் தட்சிணாமூர்த்தியை வள்ளல் என்று அழைக்கின்றனர்.

மூலவர்: வதாரண்யேஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: மேதா தட்சிணாமூர்த்தி, அம்பாள்: ஞானாம்பிகை.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வதாரண்யேஸ்வரர் (வட ஆரண்யேஸ்வரர்). கம்பீரமாக தரிசனம் தரும் அழகிய சிவலிங்கம். கேட்பனவற்றை எல்லாம் வாரி வழங்கும் வள்ளலாக இருப்பதினால் வள்ளலார் என்ற திருநாமம். மேற்கு பார்த்த சந்நிதி.

தனி சந்நிதியில் தெற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார் அன்னை ஞானாம்பிகை.

கோஷ்டத்து மூர்த்தங்கள், பிரகார வலச்சுற்றிலுள்ள பரிவார தேவதைகள், உலாத் திரு மேனிகள் யாவும் மிகவும் அழகாக இருக்கின்றன.

இத்தலத்தின் சிறப்பு மூர்த்தமான மேதா தட்சிணாமூர்த்தி மிகுந்த வரப்ரசாதி. நந்தியம்பெருமான் மீது யோகாசனமாக ஆரோகணித்து, ஞானமுத்திரை கொண்டு தரிசனம் தரும் அழகான திருவுருவம்.

ஞானாம்ருத சரஸ் எனப்படும் பஞ்ச பிரம்ம தீர்த்தம் திருக்குளம். கோசாலை ஒன்றை அமைத்து பசுக்களை பராமரிக்கின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...