சாலிகிராமம் என்ற பகுதியில் வாழ்ந்த அண்ணாசாமி தம்பிரான் என்பவர், தனது தீராத வயிற்று வலி போக வேண்டி கால்நடையாகவே திருப்போரூர் சென்று முருகனை வழிபட்டு வந்தார். முருகனின் அருளால் வயிற்று வலியிலிருந்து குணமடைந்ததும் பல முருகன் தலங்களுக்கு சென்று வழிபட்டார். பழனியிலிருந்து கொண்டு வந்திருந்த பழநியாண்டவர் படத்தை ஒரு ஓலைக் கொட்டகையில் வைத்து பூஜித்து வந்தார்.
தம்மை நாடி வந்து குறைகளை சொல்பவர்களுக்கு அருள் வாக்கு கூறி வந்தார். பின்னர் யாத்திரை போக தீர்மானித்து, தேனாம்பேட்டையை சேர்ந்த ரத்தினசாமி என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு புறப்பட்டார். ரத்தினசாமி, முருகனின் திருவுருவம் ஒன்றை செய்து குறி சொல்லும் மேடைக்கருகே சிறிய கோவில் ஒன்றை கட்டி அதில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். வாரியார் ஸ்வாமிகளின் பணியால் கோவில் பெரிதும் வளர்ந்தது என தல வரலாறு.