நாரத முனிவரின் யோசனைப்படி, தீர்த்த யாத்திரை மேற்கொண்ட கோடில மகரிஷி, ஓம் நமோ நாராயாணா எனும் அஷ்டாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி, பல நதிகளில் நீராடி, பல கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து, க்ஷேத்ராடனம் மேற்கொண்ட சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டார். விஷ்ணுவை தரிசிக்க முடியாமல் போய்விடுமோ என வருந்துகையில், அவருடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்து, லட்சுமி சமேத நாராயணராக காட்சி தந்த ஸ்தலம். ராமாநுஜர் இவ்வாலயம் வந்து பெருமாளை மங்களாசாஸனம் செய்ததாக கூறுகின்றனர். வள்ளலார் இப்பெருமாளை போற்றி அருட்பாக்கள் பாடியுள்ளார்.
அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோவில் (கருங்குழி)
Primary Deity
ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் லட்சுமியை மடியில் இருத்தியவாறு அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக ஸ்ரீநிவாசப் பெருமாள் உற்சவமூர்த்தியாக சேவை சாதிக்கின்றார். பெரிய திருவடி, சிறிய திருவடி, சக்கரத்தாழ்வார், நரசிம்மர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.