இவ்வாலயத்து இறைவனைப் பூஜிப்பதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஏழை அந்தணன் படும் கஷ்டத்தைக் கண்டு, அவனுக்கு உதவ எண்ணிய ஐந்து தலை நாகம் ஒன்று தினமும் அவனுக்கு ஒரு மாணிக்கத்தைக் கக்கியது. அதை விற்றதில் கிடைத்த பணத்தைக் கொண்டு அந்தணன் நித்ய ஆராதனைகளை செய்து வந்தான். காசி யாத்திரைக்குப் புறப்பட்ட அந்தணன், தனது மகனிடம் நடந்தவைகளைக் கூறி, நாகம் தரும் மாணிக்கத்தை கோவில் செலவுகளுக்கும், பசியாற்ற உணவிற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறிச் சென்றார். பேராசை பிடித்த மகன், அந்தப் பாம்பைக் கொன்று விட்டால் நிறைய மாணிக்கங்கள் கிடைக்கும் என நினைத்து பெரிய தடியுடன் ஒளிந்து நின்றான். இதனைத் தெரிந்து கொண்ட நாகம் அவன் மீது விஷத்தைக் கக்கிக் கொன்று விட்டது. பிள்ளையை இழந்த துக்கத்தில் அந்தணனும் உயிரை விட்டார். ஐயர்சாமியின் அதிட்டானம் இங்கு உள்ளது. தினமும் அந்தப் பெரிய நாகம் வந்து வழிபடுவதாக ஊர்மக்கள் கூறுகின்றனர்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (மேலத்திருமாணிக்கம்)
Primary Deity
சுந்தரேஸ்வரர்
Temple Type
மீனாட்சியம்மன் கோவில்
Location
திருநெல்வேலி
Contact Number
+91-Not Available
ஸ்ரீ மீனாட்சி, வள்ளி தெய்வயானை உடனாய முருகன், சுந்தரேஸ்வரர் ஆகிய மூன்று சந்நிதிகள் வரிசையாக உள்ளன. மீனாட்சி சந்நிதிக்குச் செல்லும் முன்பாக உச்சிஷ்ட கணபதியை தரிசித்து ஆசி பெற்று ஆலய சுற்று தொடங்குகின்றனர். பிரதான கருவறையில் மூலவராக உள்ள சுந்தரேஸ்வரர் ஒளி வீசும் தேஜோமய லிங்கமாக காட்சி தருகிறார். பெயருக்கேற்ப அழகிய லிங்கத் திருமேனி. பிரகார வலச்சுற்றில் காவல் தெய்வமான கருத்தாண்டியை தரிசிக்கலாம். அடுத்து ஆதிமூர்த்தி அதிட்டானம் கொண்டு தரிசனம் தருகின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.