சிவபெருமானின் திருமேனியை அலங்கரித்து வந்த காளன் என்னும் நாகம், பொறுப்புகளை மறந்து தன் இச்சையாக இருந்ததால் கோபம் கொண்ட சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டியும், பரிகாரம் வேண்டியும், காளஹஸ்தி சென்று இறைவனை வழிபட்டு வந்தது. பின்னர் முக்தி பெற்று சிவலோகம் சென்றடைந்தது என காளத்தி புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ராகு பகவானும், கேது பகவானும் தனித்தனி லிங்கங்கள் அமைத்து வழிபட்டு கிரக பதவி பெற்றதாக வரலாறு. கருவறையின் இடப்புறம் சிலந்தியும், பாம்பும் சுவாமியை பூஜை செய்த இடம் என்று சொல்கின்றனர்.
நாக தோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகிய தோஷங்கள் உள்ளவர்கள், இவ்விறைவனை வழிபட்டால் தோஷங்களிலிருந்து விடுபடலாம்.
ராஹு பகவானும் கேது பகவானும் லிங்கத் திருவுருவங்களாக இருப்பதால் இத்தலம் ஒரு நாகதோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.