அருள்மிகு மலைமேல் பசுபதீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுப்பாக்கம்

Primary Deity
பசுபதீஸ்வரர்
Temple Type
ஆதீஸ்வர் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

மூன்று கண்களையுடைய திரிநேத்ரதாரி முனிவர் இம்மலையில் நீண்ட காலம் தவமிருந்தார். தவத்தில் மகிழ்ந்து பிரத்யட்சமான இறைவனிடம், திரிபுரம் எரித்த போரின்போது கொண்ட கோலத்தை மீண்டும் ஒரு முறை காண்பிக்க வேண்டும், தரிசிக்க ஆசையாக உள்ளது என விண்ணப்பித்தார். உமா தேவியை உடன் கொண்டு, வில்லும் அம்பும் ஏந்தி ரதத்தில் தோன்றி தரிசனம் தந்த சிவபெருமானை, இந்த மலை மீது பசுபதிநாதராக எழுந்தருளி அனைவர்க்கும் தரிசனம் தர வேண்டும் என வேண்டினார் முனிவர். அவரது வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் இங்கு எழுந்தருளியுள்ளார். பின்னர் நீண்ட காலம் தவமிருந்த திரிநேத்ரதாரி முனிவர், இங்கேயே ஜீவ சமாதி அடைந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த மலைக்கு சுதர்ஸன மேரு கிரி என்ற பெயரும் உண்டு. சித்தர்கள் பலர் அரூப நிலையில் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகிறார் பசுபதீஸ்வரர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...