பூலோகத்திலுள்ள பல மலைகளில் மருத்துவ மூலிகைகளைத் தேடி அலைந்தனர் அஸ்வினித் தேவர்கள். நாரதரின் யோசனைப்படி இந்த மலைக்கு வந்து தேட ஆரம்பித்தனர். இங்கும் கிடைக்காது போனதால் ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டு வேண்டினர். அவர்களது அறியாமை இருளைப் போக்கி, மூலிகைகள் இருக்குமிடத்தை காண்பித்த அம்பாள் இருள்நீக்கி எனப் பெயர் கொண்டாள்.
மலை முழுவதுமாக மூலிகைகள் செறிந்து கிடப்பதைக் கண்டு அஸ்வினித் தேவர்கள் சந்தோஷப்பட்டனர். அதிலும் பலா அதிபலா எனும் இரண்டு மூலிகைகள் கிடைத்தது சிறப்பானது. இவற்றிலிருந்து உருவான மந்திரங்களைத்தான் விஸ்வாமித்ரர் ராம-லட்சுமணர்களுக்கு உபதேசித்தார் எனக் கூறுவர். மூலிகைகள் மண்டிக் கிடந்ததால் ஓளஷதகிரி எனப் பெயர் கொண்டது.
அகஸ்தியர் இவ்விறைவனை வழிபட்டு மருத்துவ மூலிகைகளைப் பற்றித் தெரிந்து கொண்டதாக கூறுவர்.