அருள்மிகு மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் (காஞ்சி)

Primary Deity
ஸ்ரீ மணிகண்டேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கும்போது, அசுரர்களும் தேவர்களும் மந்தார மலையை மத்தாகவும்,

வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் பயன்படுத்தினர். வாசுகி வலி பொறுக்க முடியாமல் கால கூடம் என்னும்

நஞ்சைக் கக்கியது. நஞ்சைக் கண்டு பயந்து தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு

உதவ வேண்டி சிவபெருமான் நஞ்சை விழுங்கினார். இதனால் பதறிய பார்வதி, நஞ்சு தொண்டைக்குள்

இறங்காமலிருக்க தொண்டையை அழுத்திப் பிடித்தாள். சிவபெருமான் அந்த நஞ்சைத் தொண்டையிலேயே

இருத்திவிட்டார். இதனால் 'மணிகண்டேஸ்வரர்' என்று திருநாமம் பெற்றார்.

சனி பகவான் ஈஸ்வரனை பூஜித்த ஸ்தலம்.

மூலவர்: ஸ்ரீ மணிகண்டேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ மரகதாம்பிகை.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் மூலவரான ஸ்ரீ மணிகண்டேஸ்வரர்.

சுயம்பு லிங்கத் திருமேனி கொண்டு மேற்கு பார்த்து தரிசனம் தருகின்றார். சிவலிங்கம் சற்று சாய்ந்துள்ளது.

அம்பாள் ஸ்ரீ மரகதாம்பிகை தனி சந்நிதி கொண்டுள்ளார்.

மிகப் பெரிய திருமேனியுடன் காட்சி தரும் நந்தி, விநாயகப் பெருமான், பால முருகன் மற்றும் சனீஸ்வர பகவான்,

சூரியன் ஆகிய மூர்த்தங்களையும், சிவாலய கோஷ்ட மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.

வெளி பிரகாரத்தில் மார்க்கண்டேஸ்வரர், பணாமணீஸ்வரர், கணிகண்டிஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...