முதற் குலோத்துங்க சோழனின் பட்டத்து தேவியாகிய தியாகவல்லி நிறுவிய ஆலயம். சோழபுரம் எனப் பெயருற்று பின்னர் சோபுரம் என்றானதாக கூறப்படுகிறது. கடலுக்கு மிக அருகாமையில் இருப்பதால் 150 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரளயத்தில், மணலினால் மூடப்பட்டது. புதையுண்டு இருந்த ஆலயத்தை இரண்டு தம்பிரான்கள் கண்டுபிடித்து, மீண்டும் திருப்பணி செய்தனர். தம்பிரான் கண்ட ஸ்தலம் என்ற பெயரும் இருக்கின்றது.
தேவாரத்திருத்தலம்