பத்து ஊர்களின் நிர்வாகத்தை இங்கிருந்தபடியே நடத்தினார்களாம். ஆதனால் பத்தூர் எனப் பெயர் பெற்று, பின்னர் மருவி பாதூர் ஆனதாக கூறுகின்றனர். எல்லைக்காவல் படை இங்கு தங்கியிருந்ததால் பாதூர் என பெயர் கொண்டதாகவும் கூறுகின்றனர். (பாது என்றால் காவல்) அஹோபில மடத்து 36வது பட்டம் ஜீயர் அழகிய வெண்சடகோப ஸ்ரீநிவாச மஹாதேசிகனின் ஜீவ ப்ருந்தாவனம் இருக்கின்றது. தோல் வியாதிகளிலிருந்து குணமடையவும், அழகு மிளிரவும் இத்தலத்தில் பிரார்த்தித்து கொள்கின்றனர். அபிமான ஸ்தலம்
அருள்மிகு ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (பாதூர்)
Primary Deity
ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள்
Temple Type
ஸ்ரீ பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோவில்
Location
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். இவரை பேரழகர் என்று போற்றுகின்றனர். அலர்மேல் மங்கா தாயாரை அழகுத் தாயார் என்று போற்றுகின்றனர். திருமகள், ஆண்டாள், விஷ்வக்சேனர், சிறிய திருவடி, பெரிய திருவடி, நவநீத கிருஷ்ணன், சுதர்ஸன ஆழ்வார், மத்வாச்சாரி, ராமாநுஜர், மகா தேசிகர் ஆகியோரை சேவிக்கலாம். நவீன திருக்கண்ணாடி அறை, அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. கருட மற்றும் சேஷ நதிக்கு தெற்கே அமைந்த ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.