இங்குள்ள பிரதிஷ்டா லிங்கம், தேவியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அருகேயுள்ள சுயம்பு லிங்கம், இறைவன் சுயம்புவாக தோன்றியது - எனச் ஸ்தல வரலாறு.
பல்லவ மன்னன் ஒருவன் தனது வேண்டுதல் நிறைவேறியதும், கோவில் கட்டுவதாக கூறி, அதை மறந்துவிட்டான். ஞாபகம் வந்து செயலில் இறங்கும்போது, ஈசன் லிங்கத் திருமேனியை மறைத்து விட்டார். காசியிலிருந்து லிங்கம் ஒன்றை வரவழைத்தான் அரசன். அதை பிரதிஷ்டை செய்யும் வேளையில், மறைந்த லிங்கம் மீண்டும் வந்தது. ஆகவே இங்கு இரண்டு லிங்கத் திருமேனிகள் இருக்கின்றன. என செவி வழிக் கதை ஒன்றும் நிலவுகிறது.
கிருஷ்ணதேவராயர் பிறந்த ஊர். பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்ற ஊர்.