பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனை சிறைப்பிடித்த முருகனிடமிருந்து அவரை விடுவிக்கப் புறப்பட்ட சிவபெருமானிடம், பிரணவத்தின் பொருளைக் கூறுமாறு முருகன் கேட்டான். தன்னிடம் உபதேசம் பெற வேண்டுமானால், தந்தை என்று வராமல், பரிவாரங்களுடன் வராமல், தனித்து சிஷ்யனாக வர வேண்டுமென முருகன் கூறிவிட்டான்.
அதன்படி, தன்னுடைய பரிவாரங்களை ஒவ்வொரு இடமாக விட்டுச் சென்ற சிவபெருமான், தனது ஏகாதச ருத்ராம்சங்களை பைரவர் என்கிற சொரூபத்தில் அடக்கி, வைரவன் கோவிலில் விட்டுச் சென்றார். இங்கு பைரவர் கோவில் கொண்ட விபரத்தை ஸ்தல புராணம் விவரிக்கிறது.