சிவத் தொண்டுகளை செவ்வனே செய்து வந்த சிறந்த சிவ பக்தரான ஏனாதிநாத நாயனார் பிறந்த ஸ்தலம் இது. கள் இறக்கும் சாணரர் வகுப்பைச் சேர்ந்த இவர், திருநீறு பூசியவர்களை எல்லாம் சிவனாகவே பாவிப்பார். வாள் பயிற்சியில் விற்பன்னர். இவர் மீது பொறாமை கொண்ட இவ்வூரைச் சேர்ந்த ஒருவன், இவரைச் சண்டைக்கு இழுத்தான். சிவனடியார் வேடம் பூண்டு வாளுடன் வந்து போருக்கு அழைத்தான். வாள் கொண்டு நின்ற நாயனார், சிவனடியாரை எதிர்க்க மனமில்லாமல், அதே சமயம் நிராயுதபாணியை சிவனடியார் கொன்றார் என்ற பழிச்சொல் எதிரிக்கு தரலாகாது என எண்ணி, வாளைத் தூக்கிப் போடாது சும்மா நின்றார். இறைவன் அவருக்கு மோட்சம் அளித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் (ஏனனூர் - திப்பிராஜபுரம்)
Primary Deity
பிரம்மபுரீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available
மூலவர்: பிரம்மபுரீஸ்வரர், அம்பாள்: கற்பகாம்பாள். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான பிரம்மபுரீஸ்வரர். அம்பாள் கற்பகாம்பாள் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.