அருள்மிகு பாலசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவில் (வேளி மலை)

Primary Deity
பாலசுப்ரமண்ய ஸ்வாமி
Temple Type
Murugan Temples
Location
தருமபுரி
Contact Number
+91-Not Available

வள்ளியுடன் முருகன் தனித்து பேசிக் கொண்டிருந்தபோது வள்ளியின் உறவினர்கள் வருவதைப் பார்த்த முருகன் வேங்கை மரமாக மாறினார். இதற்கு முன்னர் இங்கு வேங்கை மரம் இல்லையே இப்போது திடீரென எப்படி முளைத்தது? என அதை வெட்ட முற்பட்டனர். உடனே முருகன் வேங்கை மரத்திலிருந்து பிரத்யட்சமாகி விஸ்வரூப தரிசனம் காண்பித்தார் என ஸ்தல வரலாறு. வெட்டுப்பட்ட பகுதிக்கு உடை அணிவித்து, நித்ய பூஜைகளை மேற்கொள்கின்றனர்.

காதல் வேள்வி நடந்த இடம் என்பதால் வேள்வி மலை எனப் பெயருற்று, பின்னர் மருவி வேளிமலை என்றானது.

அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வள்ளி குகையில் வள்ளித் திருமணம் நடந்தது என்பர். இங்கு விநாயகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். வள்ளியின் தொடர்புடைய தினைப்புனம், வள்ளிச் சோலை, வட்டச் சோலை, கிழவன் சோலை ஆகிய இடங்களை இங்கு காணலாம். வள்ளி நீராடிய சுனை அருகே பிள்ளையார், முருகன், வள்ளி ஆகியோரின் புடைப்பு சிற்பங்களைக் காணலாம்.

மலையடிவாரத்தில் அழகிய திருக்குளமும் அதன் கரையில் அமர்ந்த விநாயகப் பெருமானையும் தரிசித்து, பிள்ளையாரின் ஆசி பெற்று, 38 படிகள் ஏறிச் சென்றால் குன்றின் உச்சியிலுள்ள கோவிலை அடையலாம்.

மூலஸ்தானத்தில் நீண்ட நெடிய திருவுருவமாக கம்பீரமாக தரிசனம் தருகின்றார் பாலசுப்ரமண்ய ஸ்வாமி. எட்டடி எட்டு அங்குலம் கொண்ட அழகிய திருமேனி. பீடமும் கிரீடமும் மேலும் உயரத்தைக் கூட்டுகின்றன.

ஸ்ரீ வள்ளி தேவி உடன் இருந்து தரிசனம் தருகின்றார். ஆறடி இரண்டங்குல உயரம் கொண்ட அழகிய திருமேனி. தெய்வயானை தேவி இங்கு இல்லை.

கருவறையை ஒட்டியுள்ள சந்நிதியில் சிவபெருமானையும் நந்தியையும் தரிசித்து வணங்கலாம். தெற்கு நோக்கியவாறு ஆறுமுகநயினார் எழுந்தருளியுள்ளார். நடராஜர் திருவுருவம் அழகாக இருக்கின்றது.

தனி சந்நிதியில் கிளைகள் வெட்டப்பட்ட நிலையில் காட்சி தரும் வேங்கை மரம் சிறப்பு மூர்த்தமாகும். ஆட்டுத் தலையுடன் காணப்படும் தட்சனை முதலில் தரிசித்துவிட்டு பின்னர் இதர மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

கேரள தந்திர முறையில் பூஜைகள் நடத்துகின்றனர். கஞ்சி பிரசாதம் தருகின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...