அருள்மிகு பாலசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவில் (கபிலர் மலை)

Primary Deity
குழந்தை வடிவேலன் எனப்படும் பாலசுப்ரமண்யர்
Temple Type
Murugan Temples
Location
திருச்சிராப்பள்ளி
Contact Number
+91-Not Available

சங்க இலக்கிய புலவர்களுள் ஒருவரான கபில மகரிஷிக்கு கொடுக்கப்பட்ட ஸ்தலம் என்பதாலும், கபிலர் வழிபட்ட ஸ்தலம் என்பதாலும், கபிலை எனும் பசு இருந்ததாலும் கபிலர் மலை எனப் பெயர் கொண்டது. மேலே கபிலாஸ்ரமம் உள்ளது.

மலை அடிவாரத்திலுள்ள விநாயகப் பெருமானை வணங்கி ஆசி பெற்று 130 படிக்கட்டுக்களைக் கடந்து, மலைக்கோவிலுக்கு போக வேண்டும். மலையின் உயரம் 150 அடி. 38 வது படியில் இடும்பன் கோவிலையும், 60 வது படி மற்றும் 108 வது படிகளில் விநாயகர் கோவிலையும் தரிசிக்கலாம். மலைக்கோவிலில் சித்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார். காளஹஸ்தீஸ்வரர் மற்றும் கபிலாம்பிகை எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். பிரதான சந்நிதியில் மூலவராக பாலசுப்ரமண்யர் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள் புரிகின்றார். குழந்தை வடிவேலன் என்று அழைக்கின்றனர். வலக்கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்து அழகே உருவாக காட்சி தருகின்றார். வலப்புறமாக கபில மகரிஷி பூஜித்த ஸ்வாமி அரூபமாக உள்ளார். யோகப்பட்டை மாத்திரம் கண்ணுக்கு தெரிகிறது. கருவறை ஒரு சிறிய குகை போல உள்ளது. இதற்குள் தென்றல் காற்று எங்கிருந்தோ வீசிக்கொண்டே இருக்கும். விளக்கின் தீபத்தை அசைத்துக்கொண்டே இருக்கும். வள்ளி - தெய்வயானை தேவியர்களின் உற்சவ மூர்த்தங்கள் மிகவும் அழகானவை. பிரபையில் நாகப்படம் உள்ளது. சிகரத்தில் உச்சிப் பிள்ளையார் கோவில் இருக்கின்றது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...