பிரணவத்தின் பொருளை விவரிக்க முடியாத பிரம்மனை முருகன் தரையில் குட்டி, அவரைச் சிறை பிடித்த ஸ்தலம் இது என்ற புராணத் தொடர்பு கொண்ட கோவில். இதை விவரிக்கும் சிற்பங்கள் பல கோவிலில் காணலாம்.
16 கால் மண்டபத்தில் மூலவருக்கு நேர் எதிரே ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது - அதில் விரிந்த தாமரைப் பூவின் நடுவே வேல்.
தூரத்திலிருந்து உற்று நோக்கினால் பிரம்மன் தெரிவார். ஒரே சிற்பத்தில் இரண்டு காட்சிகள்.
முருகன், அவரது பின்னால் வீரபாகு இருவரும் நிற்க, பிரம்மன் விழித்துக் கொண்டிருக்க, முருகன் பிரம்மனின் தலையில் இடக் கையால் குட்டும் காட்சி தூண் ஒன்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சூரபத்மனிடம் போரிடும்போதுதான் முருகன் அன்னையிடம் வேல் பெற்றான். சூரனை வதைத்த பின்னரே மயில் வாகனம் கிடைத்தது. அதன் பின்னரே இரு தேவியர்களை மணந்தான். ஆகையால் இங்கு வேலும் இல்லை, மயிலும் இல்லை, இரு தேவியர்களும் இல்லை.