திருஞானசம்பந்தர் தமது அடியார்களுடன் செல்கையில், 'பரசமய கோளரி வந்தார்' என்று முத்துச் சின்னங்கள் ஊத, அதனைப் பொறுக்க முடியாமல் பௌத்தர்கள் தடுக்க, தேவார திருமுறை எழுதும் அடியவர் பஞ்சாட்சர பதிகத்தைப் பாட, பௌத்தர்களின் தலைவனான புத்தநந்தியின் தலையில் இடி விழும்படி செய்த தலம்.
பௌத்தர்கள் மீண்டும் சாரிபுத்தனைத் தலைவனாகக் கொண்டு தர்க்கம் செய்து தோல்வியுற்று, பிள்ளையாரின் அருளால் சைவ சமயத்திற்கு மாறிய தலம்.
எதிரே தீர்த்தக் குளம் உள்ளது. இது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்கள் காலத்துக் கோவில். சோழர்கள் புதுப்பித்துள்ளனர்.