பஞ்சம் நிலவிய காலத்தில், இறைவனே கூடையைத் தோளில் சுமந்து விதைகளைத் தெளித்ததாலும், தெளித்த விதைகள் நன்கு முளைத்ததாலும், இவ்வூர் தெளிச்சேரி எனப் பெயர் கொண்டது.
பார்வதி தீர்த்தக் குளக்கரையில் வீற்றிருக்கும் விநாயகர், ஞானசம்பந்தரை பத்து முறை கூவி அழைத்தாராம். இதனால் கூவிப்பத்து என்றழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில் மருவி கோவில்பத்து என்றானதாக கூறுகின்றனர். இதனால் இந்த பிள்ளையாரை சம்பந்த விநாயகர் என்று அழைக்கின்றனர்.
அழகிய கோபுரமும், கோபுரம் முழுவதும் பலவிதமான பிள்ளையார்களின் வண்ண சுதைச் சிற்பங்களும் பார்க்க அழகாக இருக்கின்றன.