அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில் (திருவேட்களம்)

Primary Deity
பாசுபதேஸ்வரர்
Temple Type
ஆதீஸ்வர் கோவில்
Location
திருவள்ளூர்
Contact Number
+91-Not Available

'வேணு' என்றால் மூங்கில். மூங்கில்கள் மிகுந்து காணப்பட்ட வனமாக இருந்தமையால், இது வேணுவனம் எனப்பட்டது.

வேடுவனாக வந்த இறைவன் போரிட்டதால், 'வேட்களம்' என்றாயிற்று.

ஸ்ரீ கிருஷ்ணரின் யோசனைப்படி, சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்காக, இங்குள்ள மூங்கில்வனத்தில் அர்ஜுணன் தவமிருக்கின்றான். தவத்தைக் கலைக்க, மூகாசூரனை பன்றி உருவில் அனுப்புகின்றான் துரியோதனன்.

வேடுவன்-வேடுவச்சி கோலத்தில் சிவபெருமானும் பார்வதியும் அர்ஜுணனுக்கு உதவ வருகின்றனர்.

வேடன் வடிவிலிருந்த சிவபெருமான் எய்த அம்பும், அர்ஜுணன் எய்த அம்பும் ஒரே சமயத்தில் பன்றியைத் தைத்தது. பன்றி இறந்தது தன்னுடைய அம்பினால்தான் என்று இருவரும் தர்க்கம் செய்து, பின்னர் விற்போர் புரிந்தனர். அர்ஜுணனின் வில் உடைந்தது. உடைந்த வில்லால் வேடன் தலையில் ஓங்கி அடிக்கின்றான் அர்ஜுணன்.

பின்னர் வந்திருப்பது இறைவனே எனப் புரிந்துகொண்ட அர்ஜுணன், பிழையை மன்னித்தருளுமாறு வேண்டி, பாததீட்சை பெற்று, பாசுபதாஸ்திரம் பெறுகிறான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

பினாகம், சாரங்கம், காண்டீபம் ஆகிய மூன்று பிரசித்தி பெற்ற விற்களும் தோன்றிய இடம் இது.

பன்றியை உசுப்பி அர்ஜுணனின் தவத்தைக் கலைத்த 'உசுப்பூர்' எனும் இடம் அருகாமையில் உள்ளது.

மூலவர்: பாசுபதேஸ்வரர்் அம்பாள்: நல்ல நாயகி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக பாசுபதேஸ்வரர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். இது சுயம்பு மூர்த்தம்.

வில்லால் அடியுண்ட லிங்கம் என்பதால், திருமுடியில் ஒரு பிளவு பள்ளமாக உள்ளது. இதை 'பார்த்தப்பிரகர லிங்கம்' என்பார்கள். பாசுபதம் கையில் வைத்துள்ள உற்சவ விக்ரகமும், அர்ஜுணனின் உற்சவ விக்ரகமும் கொள்ளை அழகுடன் இருக்கின்றன.

வலச்சுற்றில் - நர்த்தன விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். நடராஜரின் காலடியிலுள்ள முயலகனின் தலை இடப்பக்கமாக உள்ளது. சூரிய-சந்திரர்கள் அருகருகே இருப்பதால், கிரகணங்களின்போது வழிபட்டால் தோஷங்கள் விலகும் என நம்பிக்கை.

அர்ஜுணனுக்கு பாசுபதம் அருளிய பாசுபதேஸ்வரர், கிராத மூர்த்தி, அர்ஜுணன் போரிடுதல், வேடுவன்-வேடுவச்சி, அர்ஜுணனின் தவக்கோலம் போன்ற சிற்பங்கள் வெகு நேர்த்தியாக இருக்கின்றன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...