பரிதி எனப்படும் சூரியன் குன்ம நோய் கொண்டு அவதியுற்றான். தனது நோய் நீங்கி நலம் பெற வேண்டி இத்தலத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து, நித்ய வழிபாடுகள் செய்து, இவ்விறைவன் அருளால் நோய் நீங்கப் பெற்றான்.
பரிதி (சூரியன்) உருவாக்கிய கோவில் என்பதால் இவ்வூர் பரிதிநியமம் எனப்படுகிறது. பரிதி வழிபட்ட இறைவன் பரிதியப்பர் என அழைக்கப்படுகிறார்.
பிரம்மசர்மாவும் அவனது மனைவியும் சாபத்திற்குட்பட்டு கிளி வடிவம் கொண்டனர். இவ்விறைவனை வழிபட்டு சாபத்திலிருந்து விடுபட்டு சுய உருவம் பெற்றனர். சூரிய வம்சத்தில் தோன்றிய ஸ்ரீ ராமனின் முன்னோர்களில் ஒருவரான சிபிச்சக்ரவர்த்தி நிர்மாணித்த ஆலயம்.
மஹா சிவராத்திரி, ரத சப்தமி, அட்சய த்ருதியை, அன்னாபிஷேகம், தீபாவளி, கார்த்திகை பூர்ணிமா, ஆருத்ரா, சங்கராந்தி மற்றும் பங்குனியில் 10 நாட்கள் சூரிய பூஜை ஆகியவற்றை சிறப்புற நடத்துகின்றனர்.
மார்க்கண்டேயன் அருவமாக இருந்து கொண்டு சிவபூஜை செய்வதாக ஐதீகம். ஆகையால் இத்தலம் ஆயுள் விருத்தி ஸ்தலமாக கருதப்படுகிறது.
தேவாரத் திருத்தலம் - பாஸ்கர க்ஷேத்திரம் - பிதுர் தோஷ பரிகார ஸ்தலம்.