தேவர்களும் முனிவர்களும், இங்குள்ள வில்வ வனத்தின் பருத்த வில்வ மரம் ஒன்றை தேர்ந்தெடுத்து அதன் கீழ் லிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டனர். பிரத்யட்சமான இறைவனிடம், தங்களுக்கு அருவுருவ நிலையாக பரஞ்சோதி வடிவமாக காட்சி தர வேண்டுமென வேண்டினர். அவ்வாறே இறைவனும் காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பிற்காலத்தில் மௌன குரு ஸ்வாமிகள் புதிய ஆவுடை ஒன்றை அமைத்து கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளதாக குறிப்பொன்று கூறுகிறது.
சோழ மன்னன் தஞ்சன் என்பவன் க்ஷேத்ராடனங்களை முடித்துக் கொண்டு பதவியேற்கலாம் என முடிவெடுத்து யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்து இறைவன் பரஞ்சோதியை தரிசித்து, பின்னர் இங்கேயே சமாதியடைந்தான். அவனது பெயரால் தஞ்சாக்கூர் என வழங்கப்படுகிறது.
மாணிக்கவாசகரின் பாடல் பெற்ற ஸ்தலம். நரியை பரியாக மாற்றியபோது தங்கிய ஸ்தலம். தேவார வைப்புத்தலம்.