ஜமதக்னி முனிவர் இவ்விறைவனை வழிபட்டு பரசுராமனை புத்திரனாக அடையும் பாக்கியம் பெற்றார். தாயின் தலையை வெட்டிய தோஷம் நீங்க பரசுராமர் பூஜித்த ஸ்தலம். பரசு பீஜாட்சர லிங்க வடிவைச் சேர்ந்தது.
திருதியை திதி தேவதைகள் இங்கு தவமிருந்து, எதையும் விருத்தி செய்யும் ஆற்றலைப் பெற்றனர். ஒரு காலத்தில் அட்சய திருதியை தினத்தை விழாவாகக் கொண்டாடிய ஸ்தலம். பிரம்மாவின் அகங்காரம் களையப்பட்ட ஸ்தலம். அட்சய திருதியை நாளில் இவ்விறைவனுக்கு மாதுளை முத்துக்கள் கொண்டு காப்பு செய்தால் வீடு - மனை செழிக்கும் என்பர்.
இவ்வூரைச் சுற்றியுள்ள நான்கு படை வீடுகளில் இது பம்பைப் படைவீடு என சரித்திரத்தில் குறிப்பு உள்ளது. இவ்வூரைச் சுற்றிலும் சமணர்கள் 'முழைகள்' எனப்படும் சிறு குன்றுகளை தடுப்பாக அமைத்து வைத்திருந்தனர். இதனால் 'முழையூர்' எனப்படுகிறது.