சிவபெருமானின் பாதங்களுக்கு நித்ய பூஜை நடப்பதால், சிவபாத ஸ்தலம் எனப் பெயர் கொண்டது. விளமர் என்றும் அழைக்கப்படுகிறது.
சிவபெருமானின் நடனக் கோலத்தைக் காண வேண்டி ஆதிசேஷன் நீண்ட தவம் மேற்கொண்டார்.
அறிவுரைப்படி பூலோகம் வந்த ஆதிசேஷன், அங்கு புத்திர பாக்கியம் வேண்டி தவமிருந்த அத்ரி-அனுசுயா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்து பதஞ்சலி என்ற பெயர் கொண்டு வளர்ந்து வந்தார். வியாக்ரபாதருடன் சேர்ந்து தில்லையிலே நடனக்காட்சியை கண்டு களித்தார்.
பின்னர் விளமல் என்றழைக்கப்படும் இவ்வூருக்கு வந்தார். அம்பாளின் யோசனைப்படி இத்தலத்தில் மண்ணால் லிங்கம் ஒன்றை பிடித்து வைத்து வழிபட்டு வந்தார். சிவபெருமான் பிரத்யட்சமானார். பக்தி பரவசத்திலே தன்னை மறந்து தேவகாந்தாரி ராகத்தில் பாடலானார் பதஞ்சலி. சிவபெருமானும் நர்த்தனம் ஆடினார். நடனம் ஆடும்போது தனது ருத்ரபாதத்தை காட்டியருளினார்.
தசரதர் பித்ரு சாபம் நீங்கப் பெற்ற ஸ்தலம்.
தேவாரத் திருத்தலம்.