அருள்மிகு படியளந்த பெருமாள் திருக்கோவில் (தேவதானம்)

Primary Deity
ஸ்ரீ ரங்கநாதர்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
கோவை
Contact Number
+91-Not Available

இந்திரன் இந்த பூமியை தேவர்களுக்கு தானமாக கொடுத்ததால் இவ்வூருக்கு தேவதானம் என்ற பெயர் வந்தது.

மூலவர்: ஸ்ரீ ரங்கநாதர், தாயார்: ஸ்ரீ ரங்கநாயகி.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ ரங்கநாதர், ஆதிசேஷனை படுக்கையாக்கிக் கொண்டு, போக சயனக் கோலத்தில், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சயனித்துள்ளார். 18 அடி நீளம் கொண்ட பெரிய திருமேனி. சாளக்ராம கற்களால் உருவானது. ஆதிசேஷன் மூன்று மடிப்புகளையுடைய படுக்கையை விரித்துள்ளார்.

படர்ந்த திருமுடி கொண்ட சிரசுக்கு, தலையணையாக ஒரு மரக்கால் வைத்துள்ளார். வலக்கையை திருமுடிக்கு கீழேயும், இடக்கையை நீட்டியும், அற்புதமாக தரிசனம் தருகின்றார் ஸ்ரீ ரங்கநாதர். திருமேனி முழுவதும் சாளக்ராம கற்கள்.

நாபியிலிருந்து நீண்ட கமலத்தில் பிரம்மதேவன் இருக்க, திருவடிகளருகே திருமகளும், நிலமகளும் வீற்றிருக்க, கையில் வீணையுடன் தும்புருவும், பெருமாளை வணங்கிய நிலையில் ஆஞ்சநேயரும் சேவை சாதிக்க தரிசிக்க மகிழ்ச்சி கிட்டுகிறது.

மூலஸ்தானத்து சுவரில் பெருமாளின் பாத வடிவங்களும், பின்னால் உள்ள புற்றுக் கோவிலும், அதில் வாழும் சர்ப்பமும் காணலாம். தென் கிழக்கே நாகராஜன் சந்நிதி கொண்டுள்ளார். நாக தோஷம் கொண்டவர்கள் இவரிடம் பிரார்த்திக்கின்றனர்.

சாளக்ராம கற்களால் உருவான திருமேனி என்பதால் திருமஞ்சனம் கிடையாது. தைலக் காப்பு மட்டுமே.

தாயார் ஸ்ரீ ரங்கநாயகி தனி சந்நிதி கொண்டுள்ளார். உற்சவ மூர்த்தங்களாக இருக்கும் வேணுகோபாலன் மற்றும் சக்கரத்தாழ்வார் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...