ஆதி சங்கர பகவத் பாதர் மரபினரால் வழிபடப்பட்ட கோவில். வேதாரண்யத்தைச் சேர்ந்த பகவர் என்பவர் இறந்த தனது தாயின் எலும்புகளை, கங்கையில் இடுவதற்காக ஒரு குடத்தில் வைத்திருந்தார். இங்குள்ள காவிரியாற்றங்கரையில் அதனை வைத்துவிட்டு நீராடச் சென்றார். திரும்ப வந்து பார்க்கையில் எலும்புகள் தாமரை மலர்களாக இருந்தன. காவிரியின் பெருமையையுணர்ந்து இங்கேயே நீத்தார்கடன் செய்துவிட்டு, குடத்தை காவிரியில் விட்டார். இவரது பெயராலேயே இந்தப் படித்துறையை பகவத் படித்துறை என்றும் விநாயகரை பகவத் விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.
அருள்மிகு பகவத் விநாயகர் திருக்கோவில் (கும்பகோணம்)
Primary Deity
பகவத் விநாயகர்
Temple Type
Vinayagar Temples
Location
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள பகவத் விநாயகர் மிகவும் அழகாக இருக்கின்றார். நவகிரக தோஷங்களை நீக்கியருளும் வரபிரசாதி. இவரது நெற்றியில் சூரியன், நாபிக்கமலத்தில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ்க் கையில் புதன், சிரசில் வியாழன், இடது கீழ்க் கரம் சுக்கிரன், வலது மேல் கையில் சனி, இடது மேல் கையில் ராகு, இடது தொடையில் கேது என நவகிரகங்கள் குடிகொண்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.