அருள்மிகு நீள்நெறி நாதர் திருக்கோவில் (தண்டலைச்சேரி)

Primary Deity
நீள்நெறி நாதர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

கூர்ம அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணு, தனது அவதார நோக்கத்தை மறந்து, செருக்குற்று, கடலை கலக்கி அட்டகாசம் செய்தார். அவர் முன் தோன்றிய சிவபெருமான், அவரது அவதார நோக்கத்தை எடுத்துரைத்து, அகங்காரத்தை அடக்கி, ஆமை ஓட்டினை அணிந்தார் என ஸ்தல வரலாறு.

அறுபத்திமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அரிவட்ட நாயனார் அவதரித்த ஊர். (தண்டலைச்சேரியின் கிழக்கே 1 கி.மி தூரத்திலுள்ள கணமங்கலத்திடல்) நீண்டு வளைந்த அரிவாளை தாங்கியும், தலைப்பாகை அணிந்தும் காணப்படுவார்.

தனக்கு கூலியாக வழங்கப்படும் செந்நெல்லை அரிசியாக்கி சாதம் சமைத்து, செங்கீரை சேர்த்து, மாவடு சேர்த்து, இறைவனுக்கு படைப்பது அரிவட்டநாயனாரின் பழக்கம். வறுமையுள்ள காலத்திலும் தவறாது செய்து வந்தார்.

ஒரு நாள் உச்சி வெய்யிலில் பசி மயக்கம் வேறு சேர்ந்து கொள்ள தள்ளாடிக் கொண்டே ஸ்வாமிக்கு நைவைத்யம் கொண்டு வருகையில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில், கொண்டு வந்த சோறும் மாவடுவும், பூமியில் சிதறி காய்ந்த வெடிப்பிற்குள் சென்றது.

இறைவனுக்கு படைக்க முடியாமல் வீணாய்ப் போனதே என வருத்தமுற்ற நாயனார், அரிவாளால் தனது கழுத்தை வெட்டிக் கொள்ள முற்பட்டார். அப்போது வெடுக் என்று மாவடு கடிக்கும் சத்தம் கேட்டது. நிலப்பிளவிலிருந்து ஒரு கை வெளியே தோன்றி நாயனாரை தடுத்தாட் கொண்டதாக ஸ்தல வரலாறு.

அரிவாளால் தன்னை வெட்டிக் கொள்ள எத்தனித்ததால் அரிவட்ட நாயனார் என்றானார்.

அரிவட்ட நாயனார் முக்தி பெற்ற ஸ்தலம்.

தேவாரத்திருத்தலம்

மூலவர்: நீள்நெறி நாதர், அம்பாள்: ஞானாம்பிகை

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான நீள்நெறி நாதர் எனப்படும் ஸ்திரபுத்தீஸ்வரர்.

அம்பாள் ஞானாம்பிகை அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.

ஞானசித்தி விநாயகர், சுப்ரமண்யர், சூரிய - சந்திரர்கள் மற்றும் கோஷ்ட தெய்வங்கள் அழகாக இருக்கின்றன.

கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் ஒன்று. தற்போது இருப்பது பிற்காலத்தில் கட்டியது.

அரிவட்ட நாயனாரும் அவரது மனைவியும், சாதம் - மாவடு நிலத்தில் கொட்டப்படுவதையும், நாயனார் கழுத்தை அரிய முற்படுவதையும், கை வெளிப்படுதல், ரிஷபாரூடரின் தரிசனம் ஆகிய காட்சிகளையும் புடைப்பு சிற்பங்களாக கண்டு களிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...