நீரிலே பள்ளிகொண்டவர் என்பதாலும், மச்சாவதாரம் எடுத்தவர் என்பதாலும், பிரளய அழிவிலிருந்து காத்தருள்பவர் என்பதாலும் நீரகத்தான் எனத் திருநாமம் கொண்டார். விஷ்ணு பக்தனான சத்யவிரதன் என்னும் மன்னன் பிரளய காலத்தில் விஷ்ணுவின் திருவிளையாடலைக் காண ஏங்கினான். அவன் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய விஷ்ணு விழைந்தார். பிரம்மா அசந்த நேரத்தில் நான்கு வேதங்களையும் கவர்ந்து சென்றான் குதிரைமுகன் என்னும் அரக்கன். மச்சாவதாரம் எடுத்த விஷ்ணு, குதிரைமுகனிடமிருந்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்துவிட்டு, சத்யவிரதனுக்கும், ஏழு முனிவர்களுக்கும் உபதேசம் செய்து, தனது அவதாரத்தை அவர்களுக்குக் காட்டியவரே நீரகத்தான் எனப்படும் ஜெகதீஸ்வரப் பெருமாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
அருள்மிகு நீரகத்தான் திருக்கோவில் (காஞ்சி)
Primary Deity
நீரகத்தான் (தற்போது இல்லை) / ஜெகதீஸ்வரப் பெருமாள் - உற்சவர்
Temple Type
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலவர்: நீரகத்தான் (தற்போது இல்லை)் உற்சவர்: ஜெகதீஸ்வரர்் தாயார்: நிலமங்கைவல்லி. மூலஸ்தானத்தில் உற்சவரான ஜெகதீஸ்வரப் பெருமாள், தெற்கே திருமுகமண்டலம் கொண்டு, நின்ற கோலத்தில் சங்கு-சக்கர-கதாதாரியாக சேவை சாதிக்கின்றார். அக்ரூரருக்கு பிரத்யட்சமானதாக ஐதீகம். தாயார் நிலமங்கைவல்லி தனிச் சந்நிதி கொண்டுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.